தமிழகம் பெரியார் மண், அம்பேத்கர் கொள்கைகளால் பக்குவப்பட்ட மண்: தேசம் காப்போம் மாநாட்டில் திருமா முழக்கம்

  0
  13
  Thiruma

  ஜி.கார்னர் பொன்மலை இரயில்வே மைதானத்தில் சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து நடைபெற்ற தேசம் காப்போம் மாநாட்டில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தமிழகம் பெரியார் மண், அம்பேத்கர் கொள்கைகளால் பக்குவப்பட்ட மண், இங்கே சனாதன சக்தி வேரூன்ற முடியாது என்று பேசினார்.

  திருச்சி: ஜி.கார்னர் பொன்மலை இரயில்வே மைதானத்தில் சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து நடைபெற்ற தேசம் காப்போம் மாநாட்டில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தமிழகம் பெரியார் மண், அம்பேத்கர் கொள்கைகளால் பக்குவப்பட்ட மண், இங்கே சனாதன சக்தி வேரூன்ற முடியாது என்று பேசினார்.

  பாஜகவின் சனாதன ஆட்சியை எதிர்த்து விடுதலை சிறுத்தகைகள் கட்சியின் தேசம் காப்போம் மாநாடு நேற்று திருச்சியில் நடைபெற்றது. இதில் பேசிய விசிக தலைவர் திருமா, திருமாவளவன், தமிழகம் பெரியார் மண், அம்பேத்கர் கொள்கைகளால் பக்குவப்பட்ட மண், இங்கே சனாதன சக்தி வேரூன்ற முடியாது என்றார்.

  மேலும் அவர், இங்கே இரண்டு கோட்பாடுகளுக்கு இடையே யுத்தம் நடக்கிறது. ஒன்று சனாதனம், மற்றொன்று சனநாயகம், அதனால்தான் நாம் சனாதனமா?, சனநாயகமா? என்ற இரு துருவ அரசியலை நாம் முன்வைத்திருக்கிறோம். கார்ப்ரேட் அரசாகதான் மோடி அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. அண்டை நாடுகளால் வருகிற ஆபத்தை விட, ஊழலால் வருகிற ஆபத்தை விட, மது போன்ற போதை வஸ்துகளால் வருகிற ஆபத்தை விட சனாதனத்தால் வருகிற ஆபத்து மிகவும் தீங்கானது. சாதிய பெருமை பேச வைத்து மக்களை ஒருங்கிணைய விடாமல் சிதறடிப்பதே சனாதனத்தின் சூழ்ச்சி என பேசினார்.

  இந்த மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சி.பி.ஐ.(எம்) பொதுசெயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சி.பி.ஐ. பொதுசெயலாளர் ராஜா, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சி.பி.ஐ(எம்) மாநில பொதுசெயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ. பொதுசெயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர், இந்தியன் மூஸ்லீம்லீக் தேசிய தலைவர் காதர்மொஹிதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.