தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக இல்லை : பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த முதல்வர்

  0
  2
  eps

  தமிழகம் தீவிர வாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. ஜெயலலிதா இருக்கும் போதில் இருந்தே இதனை நான் எடுத்துரைத்து வருகிறேன்.

  அரியலூரில் சமீபத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘சிறுபான்மையினர் அளிக்கும் வாக்குக்காகக் கட்சிகள் அரசியல் செய்கின்றன. திமுக கூட்டணி வைத்திருக்கும் முஸ்லீம் கட்சிகளோடு தீவிரவாதிகளும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இதற்கு திமுக பதில் அளித்தே ஆக வேண்டும். இப்போதெல்லாம் தமிழகம் தீவிர வாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. ஜெயலலிதா இருக்கும் போதில் இருந்தே இதனை நான் எடுத்துரைத்து வருகிறேன். தற்போது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வருவதே இதற்குச் சாட்சி’ என்று கூறியிருந்தார்.

  ttn

  இது குறித்து இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தமிழகத்தின் அமைதியைச் சிலர் சீர்குலைக்க நினைக்கின்றனர் என்றும் தீவிரவாதிகளின் கூடாரமாகத் தமிழகம் இல்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் தவறு என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து , தமிழகம் அமைதி பூங்காவாகத் தான் மாறி வருகிறது என்றும் அனைத்து துறைகளிலும் விருதுகளும் பெறுகிறது’ என்றும் தெரிவித்தார்.