#தமிழகம்காக்க_மரம்வளர்ப்போம்! ட்விட்டரில் விழிப்புணர்வு செய்யும் நெட்டிசன்கள்!! 

  0
  1
  மரம்

  தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில, தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனக்கூறி எதிர்க்கட்சிகள் ஒருபுறம் போராட்டம் நடத்த, சமூக ஆர்வலர்கள் ஒருபுறம் ஏரியை தூர்வாருவது, மக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்குவது உள்ளிட்ட வேலைகளில் பிசியாக இருக்கும்போது நம்ம சமூகவலைதளவாசிகள் மரம் வளர்க்க வேண்டும் என ட்விட்டரில்  விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

  a

  தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியது தண்ணீர் பஞ்சம் தலைவிரிந்தாடுகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை மிக மோசமாக காணப்படுகிறது. எவ்வளவு காசு கொடுத்தாவது தண்ணீர் வாங்கலாம் என மக்கள் ஆர்வம் காட்டினாலும் தண்ணீர் தான் கிடைத்தபாடில்லை.  

  b

  தமிழகத்தில் மக்கள் தண்ணீருக்காக தவித்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிற நிலையில், மக்கள் இரவு பகலாக தண்ணீரை தேடி பல இடங்களில் அழைக்கின்றனர்.

  c

  தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை சீர் செய்ய அனைத்து கோயில்களிலும் அதிமுகவினர் மழை வேண்டி சிறப்பு யாகம் கூட செய்தனர். ஆனாலும் தண்ணீர் பஞ்சம் தீரவில்லை. ஆனால் யாகம் செய்ததாலோ என்னவோ சிறிதளவு மழை மட்டும் வந்துள்ளது. 

  d

  இந்நிலையில், ட்வீட்டரில் மரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்  ” தமிழகம் காக்க  மரம் வளர்ப்போம்” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இனிவரும் காலங்களில் தண்ணீர் பஞ்சத்தை காணாமல் இருக்கவும், வரும் தலைமுறையினருக்கு தண்ணீர் தட்டுப்பாடு என்ற நிலைமையை ஏற்படுத்தாமல் இருக்கவும் மரம் நடுவோம் என பலர் இந்த ஹேஷ்டேக்கில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.