தமிழகத்தில் 571 பேருக்கு கொரோன உறுதி.. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர்.. முழு விவரம் உள்ளே!

  0
  1
  corona virus

  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் தமிழகத்தில் 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் தமிழகத்தில் 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கும் போதே, இவ்வளவு வேகமாக கொரோனா பரவி வரும் நிலையில், ஊரடங்கு பிறப்பிக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு பன்மடங்கு உயர்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா அதிகமாக பரவியுள்ளது என்ற முழு விவரத்தை பார்க்கலாம். 

  ttn

  அதிகபட்சமாக சென்னையில் 95 பேருக்கும், கோவையில் 58 பேருக்கும், திண்டுக்கல்லில் 45 பேருக்கும் நெல்லையில் 38 பேருக்கும் ஈரோட்டில் 32 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, ராணிப்பேட்டை-25, நாமக்கல்-25, தேனி-23, கரூர்-23, செங்கல்பட்டு-22, மதுரை-19, திருச்சி-17, விழுப்புரம்-15,திருவாரூர்-12, சேலம்-12, திருவள்ளூர்-12,  திருவள்ளூர்-10, கடலூர்-10, திருவண்ணாமலை-8, கன்னியாகுமாரி-6, சிவகங்கை-5, வேலூர்-5, தஞ்சாவூர்-5, காஞ்சிபுரம்-4, நீலகிரி -4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர்-3, ராமநாதபுரம்-2, கள்ளக்குறிச்சி-2, பெரம்பலூரில் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.