தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ்! மொத்த பாதிப்பு 124 ஆக உயர்வு!!

  0
  4
  கொரோனா வைரஸ்

  கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது

  கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. 

  coronavirus

  இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74லிருந்து 124  ஆக உயர்ந்துள்ளது.அதில் 45 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள். இந்த 45 பேர் எங்கெங்கு சென்றார்கள் என்று கண்டுபிடிக்க முடியாமல் அரசு திணறிவருகிறது.