தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி : அமைச்சர் விஜய பாஸ்கர்

  0
  1
  corona

  தமிழகம் முழுவதும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று  அதிகாலை ஒருவர் உயிரிழந்தார்.

  தமிழகம் முழுவதும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று  அதிகாலை ஒருவர் உயிரிழந்தார். கொரோனாவால் முதன்முதலில் ஒருவர் உயிரிழந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லை என்றும் அவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். 

  TTN

  வெளிநாடுகளில் இருந்து திரும்பிய நபர்கள் மூலமாகவே, கொரோனா அதிகமாக பரவுகிறது என்பதால், அவர்களை தீவிர கண்காணிப்பில் வைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி தமிழகத்தில் 15,268 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் 3 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். அதன் படி, பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனாவால் சிகிச்சை பெற்று வரும் அனைவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.