தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்…!

  0
  4
  Train

  இந்த புதிய ரயில் சேவைகளை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் இன்று காணொளி மூலம் துவக்கி வைக்க உள்ளார். 

  தமிழகத்தில் புதிய ரயில் சேவைகள் துவங்குவது குறித்து மத்திய ரயில்வே துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் சிறு நகரங்களை இணைப்பதற்கான வழித்தடங்களைத் தேர்வு செய்யும் பணி சில நாட்களாக நடைபெற்று வந்தது. அதன் பின், தமிழகத்தில் சேலம் – கரூர், பழநி – கோயம்புத்தூர், பொள்ளாச்சி – கோயம்புத்தூர் இடையே வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு புதிய ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த புதிய ரயில் சேவைகளை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் இன்று காணொளி மூலம் துவக்கி வைக்க உள்ளார். 

  Train

  புதிய ரயில் சேவைகளின் விவரங்கள்:

  சேலம் – கரூர்: ஞாயிற்றுக் கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களும் இயங்கும். 

  சேலத்திலிருந்து மதியம் 1:40 மணிக்குப் புறப்பட்டு மாலை 3:25 மணிக்குக் கரூர் சென்றடையும். அதே போல், கரூரிலிருந்து காலை 11:40 மணிக்கு புறப்பட்டு 1:25 மணிக்குச் சேலம் சென்றடையும்

  பழனி – கோயம்புத்தூர்: வாரத்தின் 7 நாட்களும் இயங்கும். 

  கோயம்புத்தூரிலிருந்து மாலை 1:45 மணிக்குப் புறப்பட்டு 4:40 மணிக்குப் பழனி சென்றடையும். அதே போல், பழனியிலிருந்து காலை 10:45 மணிக்கு புறப்பட்டு மாலை 2:10 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும்

  பொள்ளாச்சி – கோயம்புத்தூர்: ஞாயிற்றுக் கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களும் இயங்கும். 

  பொள்ளாச்சியிலிருந்து காலை 7:30 மணிக்கு புறப்பட்டு 8:40 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும். அதே போல், கோயம்புத்தூரிலிருந்து அதிகாலை 5:45 மணிக்கு புறப்பட்டு காலை 7 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும்.