தமிழகத்தில் மூன்றாவது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது அமமுக!!

  48
  TTV Dhinakaran

  2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக வில் ஏற்பட்ட பெரும் குளறுபடி மற்றும் கட்சி பிளவிற்குப் பிறகு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து வெளியேறினர். அதன் பிறகு சட்டரீதியாக அதிமுகவிற்கும் இரட்டை சின்னத்திற்கு உரிமை கோரி

  தமிழகத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெருவாரியான இடங்களில் மூன்றாவது இடம் பிடித்து தமிழகத்தில் மூன்றாவது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

  2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக வில் ஏற்பட்ட பெரும் குளறுபடி மற்றும் கட்சி பிளவிற்குப் பிறகு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து வெளியேறினர். அதன் பிறகு சட்டரீதியாக அதிமுகவிற்கும் இரட்டை சின்னத்திற்கு உரிமை கோரி நடத்திய போராட்டம் மற்றும் வழக்குகள் யாவும் பொய்த்துப்போக, சசிகலா பொதுச்செயலாளராகவும் டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராகவும் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை தொடங்கினர்.

  ttv dinakaran

  டெல்டா பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் இக்கட்சிக்கு பெரும் வரவேற்பு இருந்ததால் அதிமுகவிற்கு கிடைக்கும் பெருவாரியான ஓட்டுக்களை பிரித்து டிடிவி தினகரன் தன் வசம் ஈர்ப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

  அதேபோல், 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் என இரண்டையும் சுயேச்சையாக நின்று போட்டியிட முடிவு செய்து வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு அதிமுகவினரை கலங்கச் செய்தார்.

  ttv

  டிடிவி தினகரன் ஆர் கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் நின்று மகத்தான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலிலும் அதே சின்னத்தை கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். குறிப்பிட்ட சின்னத்தை உரிமை கோருவதற்கு  முந்தைய தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் என கூறி தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதால் குலுக்கல் முறையிலேயே இவருக்கு சின்னம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் பரிசுப் பெட்டகம் சின்னத்தில் அனைத்து தொகுதிகளிலும் சுயேச்சையாக வேட்பாளர்களை நிறுத்தினார்.

  அதிமுகவிற்கு சவாலாக நின்று கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாராளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு தொகுதியில் அதிமுக வென்றது. டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

  ttv dinakaran

  அதேபோல் இடைத்தேர்தலிலும் 9 தொகுதிகளில் அதிமுக வும் 13 தொகுதிகளில் திமுக வும் வென்றது. இதிலும் ஒரு இடம் கூட அமமுக கட்சிக்கு கிடைக்கவில்லை.

  இருப்பினும் பாராளுமன்ற தேர்தலில் 21 இடங்களில் மூன்றாவது இடத்தை பெற்று, தமிழகத்தில் மூன்றாவது பெரும் கட்சியாக அமமுக தற்போது உருவெடுத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பதினோரு இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.
   21 இடங்களில் அமமுக 3ஆம் இடம்.. மக்கள் நீதி மையம் 11 இடங்களில் 3ஆம் இடம்
  நாம்  தமிழர்
  6 இடங்களில் நாம் தமிழர் கட்சி 3ஆம் இடம். காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, ‌நாமக்கல் மற்றும் பெரம்பலூர் ஆகிய தொகுதிகளில்..