தமிழகத்தில் மாபெரும் வெற்றி காண போவது யார்? பரபரப்பான கருத்து கணிப்பு முடிவுகள்!?

  0
  8
  முக ஸ்டாலின்

  மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எந்த கூட்டணிக்கு வெற்றி  வாய்ப்பு அதிகம் என இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது

  சென்னை:  மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எந்த கூட்டணிக்கு வெற்றி  வாய்ப்பு அதிகம் என இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. 

  vote

  மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி மக்களவைத் தேர்தல்  நேற்று மாலை  ஆறு மணியுடன் நிறைவடைந்தது. இதன் காரணமாக தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. 

  stalin

  இந்நிலையில் இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் தமிழகத்தில்  நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி  வெற்றி பெறும் என்று அறிவித்துள்ளது.

  edapadi

  குறிப்பாக திமுக கூட்டணி 34 முதல் 38 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும், அதிமுக கூட்டணி 0 விலிருந்து 4 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக இந்தியா டுடே கருத்து கணிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற காட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு ஏதேனும் இல்லை என்றும் அறிவித்துள்ளது.