தமிழகத்தில் மட்டுமல்ல ஆந்திராவிலும் இதே கதி தான்; சந்திரபாபு நாயுடு தர்ணா!

  0
  9
  சந்திரபாபு நாயுடு

  வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தல் உள்ளிட்டவைகளை கண்காணித்து தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது

  விஜயவாடா: பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.

  நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

  தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. அதேபோல், மொத்தம் 175 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 11-ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அம்மாநில அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

  money seized

  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டில் இருந்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தேர்தலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்த திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தல் உள்ளிட்டவைகளை கண்காணித்து தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம், பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 

  அதேபோல், திடீர் திடீரென நடக்கும் வருமான வரித்துறையின் சோதனை அரசியல் கட்சிகளை ஆட்டம் காண வைத்துள்ளது. எனினும், எதிர்கட்சியினரை குறி வைத்து வருமான வரித்துறை சோதனைகள் நடைபெறுவதாக அவர்கள் குற்றச்சாட்டுகளை முன் விட்டு வருகின்றனர்.

  income tax

  திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை, சிமெண்ட் குடோனில் கட்டுக் கட்டாக பணம், திமுக பிரமுகர் மீது சந்தேகம், விசிக பிரமுகர் காரில் பணம் பறிமுதல் என எதிர்க்கட்சியினர் படும் பாடு அனைவரும் அறிந்ததே.

  இந்நிலையில், ஆந்திர மாநிலமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது போல், அங்கும் வருமானவரித்துறையினர் கிடுக்கிபிடி காட்டி வருகின்றனர். ஆனால், அங்கு வேறு கதை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜக-வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் அம்மாநிலத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

  pm modi

  இதனை கண்டித்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்கள், வேட்பாளர்களை குறித்து வைத்து வருமான வரித்துறை சோதனை நடத்துவதாகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக வருமான வரித்துறையை மத்திய அரசு பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ள அவர், பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி அவமானத்தை ஏற்படுத்தி விட்டார் எனவும் சாடியுள்ளார்.

  இதையும் வாசிங்க

  மக்களவை, இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு; லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்!