தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் 2 மணி நேரம் திறந்திருக்குமா? – டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்

  0
  1
  Tasmac

  தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் 2 மணி நேரம் திறந்திருக்குமா என்பது பற்றி டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

  சென்னை: தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் 2 மணி நேரம் திறந்திருக்குமா என்பது பற்றி டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

  தமிழகத்தில் நாளை முதல் 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இந்த செய்தியால் ‘குடி’மகன்கள் மிகுந்த உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்தனர். இந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் 2 மணி நேரம் திறந்திருக்குமா என்பது பற்றி டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

  ttn

  அதன்படி, தமிழகத்தில் நாளை முதல் 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்ற வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என டாஸ்மாக் நிர்வாகம் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி தமிழகம் முழுக்க ஏப்ரல் 14-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளது.