தமிழகத்தில் டபுள் மடங்கான டாஸ்மாக் பார்கள்! 

  0
  14
  bar

  தமிழகத்தில்  அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பார்களின் எண்ணிக்கை 3,197 ஆக அதிகரித்துள்ளது. 

  அனைத்து பார் உரிமையாளர்களுடன் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, பார் உரிமையாளர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள சட்டத்திற்கு புறம்பான பார்களை தடுக்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

  tasmac

  தமிழகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி வரையில் 1,944 ஆக இருந்த அனுமதி பெற்ற டாஸ்மாக் பார்களின் எண்ணிக்கை தற்போது 3,197 ஆக உயர்ந்துள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதாவது அரசு அனுமதி பெற்ற பார்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 7 மாதத்தில் மட்டும் புதியதாக 1,253 டாஸ்மாக் பார்கள் அரசு அனுமதியுடன் திறக்கப்பட்டுள்ளது.