தமிழகத்தில் ஜூன் 3-வது வாரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்த முடிவு

  0
  3
  10th exam

  தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் மூன்றாவது வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது

  சென்னை: தமிழகத்தில் பத்தாம்  வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் மூன்றாவது வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது

  தமிழகத்தில் 30 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 3023-க்கும் மேற்பட்டோருக்கு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 1379 பேருக்கு மேல் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

  10th exam

  ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் பத்தாம்  வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் மூன்றாவது வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை இந்த மாத இறுதியில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.