தமிழகத்தில் கொரோனா வைரஸால் மேலும் ஒருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!!

  0
  1
  உயிரிழப்பு

  தேனி மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த சிங்காரத்தோப்பை சேர்ந்த 53 வயது பெண் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 7 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த சிங்காரத்தோப்பை சேர்ந்த 53 வயது பெண் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  ttn

  கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த நபர் மதுரையில் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து இன்று காலை விழுப்புரத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது தேனியில் ஒருவர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 3 பேருமே முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.