தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’

  0
  2
  Heavy Rain

  இந்திய வானிலை மையம் தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்டும், நாளை ஆரஞ்சு அலர்ட்டும் விடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

  சென்னையில் கடந்த இரண்டு நாட்களாகச் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிற்காமல் மழை பெய்கிறது. இதனால், கிண்டி, அண்ணாநகர், கே.கே நகர், நுங்கம்பாக்கம், வடபழனி, வில்லிவாக்கம் உள்ளிட்ட சென்னையின் பிரதான இடங்களில் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடி, தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளின் உள்ளே மழை நீர் புகுந்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மழை கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

   rain

  இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரமாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. முன்னேற்பாடுகளை மேற்கொள்வதையொட்டி நிர்வாக காரணங்களுக்காக தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை அரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.