தமிழகத்தின் வழியில் ஜார்கண்ட்! மீண்டும் டுவிட்டரில் கோபோக் மோடி!

  11
  கோபோக் மோடி

  மகாராஷ்ட்ரா அரசியல் ட்ரெண்டை பின்னுக்குத் தள்ளிவிட்டு இன்று மீண்டும் கோபேக் மோடி இரண்டாமிடத்தில் இருக்கிறது. இந்த முறை இதைச் சாதித்தவர்கள்,தமிழர்களோ,மலையாளிகளோ,பாக்கிஸ்தானியரோ அல்ல, பிஜேபி ஆட்சி நடத்தும் சின்னஞ்சிறு ஜார்க்கண்ட் மாநிலம்தான் இந்த முறை மோடியை விரட்டுகிறது. 

  election

  ஜார்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் வரும் நவம்பர் 30-ம் தேதிமுதல் டிசம்பர் 20-ம் தேதிவரை ஐந்து கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இப்போது அங்கே தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து விட்டது.காங்கிரசும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் கூட்டணி அமைத்து பிஜேபியை எதிர்த்து நிற்கிறார்கள்.

  go back modi

  இந்த நிலையில்,மோடி பிரச்சாரத்துக்கு வருகிறார் என்றதும் கோபேக் மோடி ட்ரண்டாகிஇருக்கிறது!. இத்தனைக்கும் ஜார்கண்ட் மாநிலத்தில் இப்போது ரகுபார்தாஸ் தலைமையிலான பிஜேபி ஆட்சிதான் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்துகொண்டு இருக்கிறது.2014-ல் நீங்கள் மோடியை ஆதரித்தீர்கள்,2019-லும் அள்ளிக் கொடுத்தீர்கள்.மோடி ஜி இருக்கும்போது உங்களுக்கு என்ன குறை.வரும் நவ 25-ம் தேதிம் தேதி மோடி ஜி கும்லா புனித மண்ணில் கால் வைக்கப்போகிறார்.கும்லா மற்றும் டாலகோன்னி இரண்டு ஊர்களிலும் மக்களிடையே பேச இருக்கிறார், அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர் என்று ஜார்கண்ட் முதல்வர் இன்று ட்வீட் செய்ததுதான் தாமதம்,உடனே ஜார்கண்ட் காரர்கள் கோபேக் மோடி ட்ரண்டை துவக்கி விட்டார்கள்.

  modi

  இரண்டு நாட்களாக முன்னிலையில் இருந்த மகாராஷ்ட்ரா விவகாரத்தை பின்னுக்கு தள்ளி விட்டது இந்த ட்ரண்ட். ஏப்ரல் 18-ல் தமிழகத்திலிருந்து முதல் கோபேக் மோடி என்று  ட்வீட் செய்தது யாரோ கைராசிக்காரராக இருக்க வேண்டும்.