தன்னலம் பாராது பணிபுரிந்துவரும் மருத்துவ பணியாளர்கள் உட்பட அனைவரும் நன்றி – டிடிவி தினகரன்

  0
  3
  TTV Dhinakaran

  உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. சுமார் 16 ஆயிரத்து 500 பேர் கொரோனா வைரஸ் தாக்கதால் உயிரிழந்துள்ளனர். உலகையே அச்சுறுத்திய கொரோனா தற்போது இந்தியாவை ஆட்டிப்படைத்துவருகிறது. இந்தியாவில் சுமார் 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 10 உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்கள் தன்னலம் பாராது 24 மணிநேரமும் பணியாற்றி வருகிறார்கள். 

   

  இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், “கொரோனாவுக்கு  எதிரான போராட்டத்தில் தன்னலம் பாராது பணிபுரிந்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் சேவை மகத்தானது. மிகுந்த நன்றிக்குரியது. அவர்களைப்   பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

   

   

  ஆனால், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டிருக்கிற கவச உடைகள் உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டிய தரத்தில் இல்லை என்று வெளியாகும் தகவல்கள் கவலை அளிக்கின்றன.அரசு இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு சரியான கவச உடைகளை வழங்குவதுடன் தேவையான மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்