தனி ஆளாக வீழ்த்திய அரவிந்த் கெஜ்ரிவால்! பா.ஜ.க-வை விமர்சித்து மகிழும் சிவசேனா!

  0
  10
  shiv sena party

  சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழிலான சாம்னாவில் அரவிந்த் கெஜ்ரிவாலைப் புகழ்ந்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பாரதிய ஜனதாவின் தலைவர்கள் ராணுவத்தை, அதாவது பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் கொண்ட படையைத் தனி ஒருவனாக நின்று ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் வீழ்த்தியுள்ளார்.

  பா.ஜ.க-வின் ராணுவத்தை ஒரே ஆளாக நின்று அரவிந்த் கெஜ்ரிவால் வீழ்த்தியுள்ளார் என்று தொடர்ந்து பா.ஜ.க-வை சிவசேனா சீண்டி வருகிறது.

  aap-vs-bjp

  சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழிலான சாம்னாவில் அரவிந்த் கெஜ்ரிவாலைப் புகழ்ந்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பாரதிய ஜனதாவின் தலைவர்கள் ராணுவத்தை, அதாவது பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் கொண்ட படையைத் தனி ஒருவனாக நின்று ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் வீழ்த்தியுள்ளார். கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் இந்த வெற்றியைத் தேடித் தந்துள்ளது. பா.ஜ.க தன்னுடைய தலைவர்களை டெல்லியில் குவித்தது. ஆனாலும் அது டெல்லி வாக்காளர்களைக் கவரவில்லை. சென்டிமெண்டல் பிரச்னைகளை வைத்து பொதுவாகத் தேர்தலை சந்திக்கும் நிலையில் டெல்லி தேர்தல் என்பது மிகவும் அரிதானதாக உள்ளது. நாங்கள் சொல்வதுதான் சட்டம் என்று சொல்பவர்கள் வீழ்த்தப்பட்டுள்ளார்கள்” என்று கூறியுள்ளது.