தனியே சிக்கும் காதல்ஜோடிகள் தான் டார்கெட்!  அதிர வைக்கும் ஸ்கெட்ச் ப்ளான்!

  0
  3
  மாதிரி படம்

  தமிழகம் முழுக்கவே சமீப காலங்களாக காதலர்கள் அதிகரித்து வருகின்றனர். காதலர்களைப் போலவே, காதல் வலை விரித்து பலாத்காரம் செய்து பணம் பிடுங்கும் கும்பலும் அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி, சேலம் போன்ற பகுதிகளில் வரிசையாக பல நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்து வந்தவர்கள் பிடிபட்ட நிலையில், தஞ்சையை அதிர வைத்த சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

  தஞ்சையில், பிள்ளையார்பட்டி பைபாஸ் சாலைக்கு அருகே ஒரு ரவுண்டானா இருக்கிறது. இருட்டாக இருக்கும் இந்த பகுதியில் எப்போதும் ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்காது. ஆள்நடமாட்டம் இல்லையென்றால் தான் சமூக விரோதிகளுக்கு கொண்டாட்டமாயிற்றே… சமூக விரோதிகளைப் போலவே கள்ளக் காதலர்களும், காதல் ஜோடிகளும் தங்களது தனிமைக்கான இடமாக இந்த இடத்தைப் பயன்படுத்தி வந்தார்கள். எப்போதும் கல்லூரி மாணவிகளின் கூட்டமாக இருக்கும் இந்த இடத்தை ஸ்கெட்ச் போட்டு ப்ளான் செய்திருக்கிறது ஒரு கும்பல்.

  ramesh

  இந்த பகுதிக்கு தனிமையில் வரும் காதல் ஜோடிகளையும், கள்ளக்காதலர்களையும் குறிவைத்து பணம், நகை முதலானவற்றை வழிப்பறி செய்வதோடு பாலியல் பலாத்காரமும் செய்து வந்திருக்கிறது முகமூடி கும்பல் ஒன்று. இதைப் பற்றி கேள்விபட்ட போலீசார், அவர்களைப் பிடிக்க முடியாமல் திணறி வந்தனர். யாரும் இது பற்றி புகாரும் கொடுக்க முன்வரவில்லை. இந்நிலையில், தஞ்சையைச் சேர்ந்த கெல்வின் என்பவரை வழிமறித்து நகையைப் பறித்தது கும்பல். இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் என்பவரை கைது செய்தனர். 
  விசாரணையில், ‘நானும் என் நண்பர்கள் 3 பேரும் இரவு 7 மணிக்கு அந்த பகுதிக்கு சென்று விடுவோம். எல்லோரையும் பொறுமையாக நோட்டம் விட்டு இரவு 10 மணிக்கு மேல் முகமூடி அணிந்து கொண்டு, அங்கே வருபவர்களிடம் பணம், நகைகளை பறிப்போம். கல்லூரி மாணவிகளும் புத்தகப் பைகளுடன் வருவார்கள். அப்போது நாங்கள் போதையில் இருந்தால் அவர்களை மிரட்டி பலாத்காரம் செய்வோம். ஆனால் யாரிடமும் செல்போன் பறித்ததில்லை. அதை வைத்து போலீசார் எங்களை பிடித்து விடுவார்கள் என்பதால் அதை மட்டும் நாங்கள் தொடுவதே இல்லை’ என்று அதிர வைத்துள்ளார்கள்.