தனியாக வசிக்கும் முதியவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட காத்திருக்கும் இளைஞர்களின் செல்போன் எண்கள்!

  0
  1
  help

  மருந்து பொருட்கள் வாங்க முடியாமலும் தவித்து வரும் முதியவர்களுக்கு உதவ சென்னையை சேர்ந்த இளைஞர்கள் முன்வந்துள்ளனர்.

  பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவின் படி கோவில்கள், காய்கறி கடைகள் என அனைத்தும் மூடபட்டன. அதனால் நாடே நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. கோவில்களையும் கடைகளையுமே நம்பி தெருக்களில் தங்கி இருக்கும் பல முதியவர்கள், நேற்று அனைத்தும் மூடப்பட்டதால் உணவுக்கு மிகுந்த சிரமப்பட்டனர்.

  ttn

  அவர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும், தன்னார்வலர்களும் முன்வந்து உணவு வழங்கிய பல நெகிழ்ச்சி சம்பவங்கள் நேற்று நடந்தன. இருப்பினும் மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளும் அடைக்கப்பட்டதால், வீட்டிலேயே முடங்கியிருக்கும் முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

   tt

  கொரோனா வைரஸ் குழந்தைகளையும், முதியவர்களையும் அதிகமாக தாக்குவதால் அவர்களை வீட்டிலேயே இருக்கும் படி மாநில அரசும் மத்திய அரசும் அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கையில் பணம் இருப்பினும் அத்தியாவசியமான மளிகை பொருட்கள் வாங்க முடியாமலும், மருந்து பொருட்கள் வாங்க முடியாமலும் தவித்து வரும் முதியவர்களுக்கு உதவ சென்னையை சேர்ந்த இளைஞர்கள் முன்வந்துள்ளனர். இது குறித்து பேசிய இளைஞர்கள், கையில் பணம் வைத்துக் கொண்டு அத்தியாவசியமானபொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கும் முதியவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம். எங்களுக்கு போதுமான நிதி உதவி கிடைத்த பின்னர் ,கூடிய விரைவில் உணவின்றி தவிக்கும் முதியவர்களுக்கும் உணவு வழங்க முடிவு செய்திருக்கிறோம்என்று தெரிவித்துள்ளனர்.

  அவர்களின் செல்போன் எண்கள் பின்வருமாறு,

   1. அத்வைத் சிவராம் (Advaith Shivram)

  வளசரவாக்கம் (Valasaravakkam)

   7358516184

   2. ஜெ.எஸ்.சேகர் (J S Sekar)

  சாலிகிராமம்/ அசோக் நகர் (Saligramam /Ashoknagar)

  +91 98400 47101

   3. வீரமணி ராஜு (Veeramani Raju)

  வளசரவாக்கம் (Valasaravakkam)

  9841068548

   4. ஸ்ரீ ராம் (Sriram)

  கோடம்பாக்கம் (Kodambakkam)

  9840079929

   5. நான்சி (Nancy)

  கொளத்தூர் (Kolathur)

  +91 89254 04028

   6. வினோத் (Vinoth)

  குரோம்பேட்டை (Chrompet )

  9551305656

   7. மோசஸ் ராபின்சன் (Moses Robinson)

  பல்லாவரம் (Pallavaram)

  9600143138

   8.முகமது அசன் (Mohamed Hassan)

  பாரிஸ், மண்ணடி (Mint – Mannady – Parrys)

  9962345024