தனியாக கழன்று ஓடிய பேருந்து சக்கரம்… சாமர்த்தியமாக பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர் – வீடியோ

  0
  1
  Bus

  அரசு பேருந்தின் ஒரு சக்கரம் தனியாக கழன்ற சூழலில்  சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

  திண்டுக்கல்: அரசு பேருந்தின் ஒரு சக்கரம் தனியாக கழன்ற சூழலில்  சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

  திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருச்சிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தை மணி என்ற ஓட்டுநர் ஓட்டி சென்றார். இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து கொண்டிருந்தனர். 

  இந்நிலையில், திண்டுக்கல்-திருச்சி சாலையில் இருக்கும் தாமரைப்பாடி என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக ஓட்டுநர் பக்கம் இருக்கும் பேருந்தின் வலது பக்க சக்கரம் ஒன்று தனியாக கழன்று எதிர்புற சாலையை கடந்து 400மீ தூரம் உருண்டு சென்று சோலக்காட்டுக்குள் புகுந்தது. 

  இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் மணி, பதற்றமடையாமல் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தி பயணிகளை காப்பாற்றினார். அவருக்கு பயணிகள் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர். மேலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.