தனியாக இருந்த இளைஞரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்!

  0
  1
  Rape

  ஒரு இளைஞரை 5 ஆண்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்
  மும்பையில் அரங்கேறியுள்ளது. 

  ஒரு இளைஞரை 5 ஆண்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்
  மும்பையில் அரங்கேறியுள்ளது. 

  நவி மும்பை பகுதியை சேர்ந்த இளைஞர் இருவர் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, வழியில் புகைப்பிடிப்பதற்காக மரத்தடியில் நின்றுள்ளார். அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் அதனை சாதகமாக பயன்படுத்தி, 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து அந்த இளைஞரை மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞரை பார்த்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

  men

  அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் ஆசனவாய் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் சில தினங்களுக்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.