தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியேறியவர் கைது!

  0
  1
  கைது

  இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,288ஆக உள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இதனைத்  தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கையையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதால் பாதிக்கப்பட்டவர் வசித்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுவருகிறது.

  police

  இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியேறியவர் கைது செய்யப்பட்டார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து அரசின் உத்தரவையும் மீறி வெளியேறிய அா்ச்சுனண் என்பரைவும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிக்கு உள்ளே சென்ற கிரி என்பவரையும் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினா் கைது செய்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.