தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு!

  0
  1
  drone camera

  இதுவரை 326 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  இந்தியாவில் கொரோனா வைரஸால் 4,426 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 114 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 326 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுமட்டுமில்லாமல் ஆயிரக் கணக்கான மக்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

  ttn

  தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் கோவையும் திண்டுக்கல்லும் இரண்டாவது இடத்தில் இருப்பதால், மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல்லில் தனிமைபடுத்தப்பட்ட நபர்களை திண்டுக்கல் போலீசார் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். அங்கு பாதிக்கப்பட்ட 45 பேரும் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட அவரது குடும்பத்தினரை போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும், தனிமைபடுத்தப் பட்டவர்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வீட்டுக்கே சென்று வழங்க ஏற்பாடு செய்து வருகிறது.