தனது சாதி மக்களுக்கே முக்கியத்துவம்: காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சை பேச்சு

  0
  6
  mamta

  தனது சாதி மக்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாக ராஜஸ்தான் மாநில அமைச்சர் மம்தா பூபேஷ் பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

  ஆல்வார்: தனது சாதி மக்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாக ராஜஸ்தான் மாநில அமைச்சர் மம்தா பூபேஷ் பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

  ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் மம்தா பூபேஷ்.  

  இவர் அம்மாநிலத்தின் ஆல்வார் மாவட்டம் ரெனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமது சாதி மக்கள் மேம்பாடு அடைய முக்கியத்துவம் அளிக்க உள்ளதாகவும் அதுவே தமது முதல் என்றும் பேசியுள்ளார். 

  பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவரான இவரின் இது போன்ற பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மம்தாவின் பேச்சுக்கு அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.