தனது கடைசிப் படத்துக்கு ஏடாகூடமான கதையைத் தேர்வு செய்த எஸ்.ஏ.சந்திரசேகர்…

  8
  இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்

  எஸ்.ஏ.சி.யின்  இந்த படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்க அதுல்யா மற்றும்  அறிமுக நடிகை வைபவி ஆகியோரும் கதாநாயகியாக நடிக்கின்றனர்

  ‘இது எனது 70வது படம். எனது கடைசிப்படம். இனிமேல் படங்கள் இயக்கமாட்டேன்’ என்று அறிவித்திருக்கும் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் அப்படத்திற்கு ‘கேப்மாரி’ என்று பெயரிட்டிருப்பதோடு மிகவும் ஏடாகூடமான ஒரு கதையைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும் தகவல்.

  எஸ்.ஏ.சி.யின்  இந்த படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்க அதுல்யா மற்றும்  அறிமுக நடிகை வைபவி ஆகியோரும் கதாநாயகியாக நடிக்கின்றனர்.இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று  முன் தினம் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர், ’’40 நாட்கள் படபிடிப்பு முடிந்த நிலையில் இன்னும் 10 – 15 நாட்கள் மட்டுமே படபிடிப்பு உள்ளது.இன்று பல புது ஐடியாகளுடன் இளம் இயக்குனர்கள் திரைப்படம் இயக்குகின்றனர் . இந்த  முதிய வயதிலும் கூட  இளைஞர்களுக்காகவே நானும்  இந்த திரைப்படம் இயக்குகிறேன் . என் திரையுலக பயணத்தில் இதுவே கடைசி திரைப்படம்..

  இது  IT தொழிலாளர்கள் , அவர்கள் வாழ்க்கை சூழல் பற்றிய கதை இந்த கேப்மாரி படம். இந்த திரைப்படம் முழுக்க ரொமான்டிக் காதல் கதையாக அமைந்துள்ளது.நம் நாட்டில் செக்ஸ் பற்றி பேசினால் தப்பு என்று கருதுகின்றனர். ஆனால் அது ஒரு அழகான விஷயம். அதே சமயம் மூடி மறைக்க வேண்டிய ஏடாகூடமான விஷயமும் அல்ல. அந்த ஏடாகூடம்தான் இந்தப்படம்.

  இன்னொரு பக்கம் இப்போதுள்ள பெண்கள் எல்லாம் காதலை துணிச்சலாக வெளிப்படையாக சொல்கிறார்கள். அதில் ஒரே ஒரு பிரச்சினைதான் அவர்கள் ஒரே நேரத்தில் நாலைந்து பேரிடம் காதலைச் சொல்லிவிடுகிறார்கள்’என்றார். எஸ்.ஏ.சி.யின் இந்தப் பேச்சுதான் கல்லூரி மாணவிகள் மத்தியில் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது.