தந்தையை துண்டு துண்டாக வெட்டி 3 சூட்கேஸில் வைத்து தூக்கி வீசிய மகள்: 16 வயது ஆண் காதலனுடன் செய்த பயங்கரம்!

  9
  மகள் கைது

  மகள் ஆரத்யா மற்றும் அவரது 16 வயது காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். 

  மும்பை மாகிம் கடற்கரையில், கடந்த 4-ம் தேதி, சிலர் வாக்கிங் சென்று கொண்டிருந்த சிலரின் கண்களில்  தென்பட்டது அந்த சூட்கேஸ். அதிலிருந்து ரத்தம்  வழிய கால்கள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சூட்கேஸைக் கைப்பற்றி அதைத் திறந்துப் பார்த்தபோது அதில் ஆண் சடலம் ஒன்று, துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்தது. கையோடு இணைந்த தோள்பட்டை பகுதி, ஒரு கால், மர்ம உறுப்புகள் ஆகியவை  ஒரு பிளாஸ்டிக்  பைக்குள் அடைக்கப்பட்டு அந்த சூட்கேஸின்  ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் அதன் மேல் ஸ்வெட்டர் உள்ளிட்ட சில துணிகளும் இருந்தன. அந்த துணிகளில்  ஆல்மோஸ் மென்ஸ் வியர் என்ற டெய்லர் கடையின் பெயர் இருந்தது. அதை வைத்து அங்கு சென்று விசாரித்த போது இறந்தவர் பெயரும் வீட்டுமுகவரியும் போலீசாருக்கு கிடைத்தது. 

  ttn

  இதை வைத்து பேஸ்புக்கில் தேடிய போது, இறந்தவர் அதே ஸ்வெட்டரை போட்டுக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று அதில் இருந்தது. இதனால் இறந்தவர் 59 வயதான பெனட் ரிப்பலோ என்பது தெரியவந்தது. 

  ttn

  இந்நிலையில் பெனட் ரிப்பலோ வீட்டுக்கு விரைந்த போலீசார் வீடு பூட்டி இருந்ததால் அக்கம்  பக்கம் விசாரித்ததில் அந்த வீட்டில் பெனட் ரிப்பலோ மற்றும் அவரது வளர்ப்பு மகளான 19 வயது  ஆரத்யா மட்டுமே வசித்து வந்தது தெரிந்தது. இதை  தொடர்ந்து தலைமறைவாக இருந்த வளர்ப்பு மகள் ஆரத்யா மற்றும் அவரது 16 வயது காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். 

  ttn

  அதில், ஆரத்யா அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழகி வந்துள்ளார். இதை அவரது  வளர்ப்பு தந்தை கண்டித்ததுடன் அவருக்கு தொடர்ந்து பாலியல்  தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் கடந்த 26-ம் தேதி, பெனட்டை கம்பால் தாக்கி, ஆண் நண்பரான  சிறுவனின் உதவியுடன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் மூன்று நாட்கள் சடலத்துடன் இருந்த அவர்கள், பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி 3  சூட்கேஸ்களில் அடைத்து, ஆட்டோவில் சென்று மாகிம் கடற்கரையில் வீசியுள்ளது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.