தந்தையைக் கொன்ற மகன்: சடலத்தைப் புதைக்க முயன்ற போது கையும் களவுமாகச் சிக்கியது எப்படி..!

  0
  11
  Murder

  மேட்டுப்பாளையம் அருகே சின்னக்களிப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் 60 வயதான மாகாளி என்பவர் தனது மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்னாள் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்துள்ளார்.

  மேட்டுப்பாளையம் அருகே சின்னக்களிப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் 60 வயதான மாகாளி என்பவர் தனது மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்னாள் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்துள்ளார். அவருக்கு சிவராஜ் என்ற மகன் இருக்கிறார். சிவராஜுக்கு திருமணம் ஆகி அதே தெருவில், வேறு வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்குமாம். மாகாளி வழக்கம் போல், வேலைக்குச் சென்று வீடு திரும்பியுள்ளார். சிவராஜ் நேற்று இரவு அதிகமாகக் குடித்துவிட்டு நேராக அவரது தந்தை வசிக்கும் வீட்டிற்குச் சென்றுள்ளார். 

  Murder

  சிவராஜ் குடித்துவிட்டு வந்ததால் மாகாளி அவரை திட்டியுள்ளார். இருவர்களிடையேயும் வாக்குவாதம் அதிகமாகி குடிபோதையில் இருக்கும் சிவராஜ் மாகாளியை அடித்துள்ளார். வாயதாகிவிட்டதால் மாகாளியால் சிவராஜ் அடிப்பதை தடுக்க முடியவில்லை. சண்டையில் ஆத்திரம் அதிகமான சிவராஜ் மாகாளியை அடித்து கொலை செய்துள்ளார். தனது தந்தை இறந்து விட்டார் என்று தெரிந்ததும் பதறிப் போன சிவராஜ், மாகாளி மட்டும் அந்த வீட்டில் தனியாகத் தானே இருப்பார், அதனால் இங்கு யாரும் வர மாட்டார்கள் என எண்ணி அங்கேயே அவரை குழி தோண்டி புதைப்பதற்காகக் குழியைத் தோண்ட ஆரம்பித்துள்ளார்.

   

  Murder

  மாகாளி மட்டும் தனியாக இருக்கும் வீட்டில் குழி தோண்டுவதன் சத்தம் கேட்டு பதறியடித்துக் கொண்டு, அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்துள்ளனர். அப்போது சிவராஜ் குழி தோண்டிக் கொண்டிருப்பதைக் கண்ட மக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். தந்தையின் சடலத்தை ஊர் மக்கள் பார்த்து விட்டதால் அங்கிருந்து சிவராஜ் தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார். அதன் பின், அங்கு வந்த காவல்துறையினர் மாகாளியின்   சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அதனையடுத்து, தலைமறைவான சிவராஜை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.