தண்ணீர் தொட்டியில் தனக்குத் தானே குழி தோண்டிய இளைஞர் ! கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பரபரப்பு !

  0
  3
  Youth Spoiled Water Tank

  தண்ணீர் தொட்டி மேல் நின்று அந்த தண்ணீர் தொட்டியின் கீழ்ப்பகுதியை இளைஞர் உடைக்கும் காட்சிகள் உள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  ஓடும் பாம்பை மிதிக்கும் வயது என்பதால் ஆபத்தை உணராத இளைஞர் ஒருவர் செய்த காட்சிகள் அந்த வீடியோவை பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது. இந்த சம்பவம் நடந்த இடம் பற்றி சரியான தகவல்கள் இல்லை.

  WaterTank

  ஒரு இளைஞர் தண்ணீர் தொட்டி மேல் நின்று கொள்கிறார். பின்னர் தண்ணீர் தொட்டியின் கீழ்ப் பகுதியை சேதப்படுத்துகிறார். பின்னர்  தண்ணீர் கொட்டத் தொடங்குகிறது. இதை பொது மக்கள் வேடிக்கை பார்க்கின்றனர். சிலர் செல்போனில் வீடியோ எடுக்கின்றனர். சிறிது நேரத்தில் அந்த தண்ணீர் தொட்டி உடைந்து கீழே விழுகிறது. அப்போது சட்டென அங்கிருந்து குதித்து தப்பி விடுகிறார் அந்த இளைஞர். இன்னும் சில வினாடிகள் அவர் தொட்டி மீது நின்றிருந்தால் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்திருப்பார்.

  சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என தெரியவில்லை. ஆனால் ஆபத்தை உணராமல் இளைஞர் செய்த இந்த செயலுக்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.