தண்ணீர் தட்டுப்பாட்டைத்  தீர்க்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

  0
  1
  ஸ்டாலின்

  வரலாறு காணாத அளவிற்கு தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.  இதில் ஆளுங்கட்சியும்,. எதிர்க்கட்சியும் மாறி மாறி குற்றச்சாட்டி வந்தாலும் பாதிக்கப்படுவது என்னவோ சாமானிய மக்கள் தான். 

  சென்னை : தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டைத்  தீர்க்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். 

  வரலாறு காணாத அளவிற்கு தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.  இதில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி குற்றச்சாட்டி வந்தாலும் பாதிக்கப்படுவது என்னவோ சாமானிய மக்கள் தான். 

  stalin

  இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க வலியுறுத்தி  இன்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த கண்டன  ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

  அப்போது பேசிய அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின், ‘தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க அதிமுக அரசு யாகம் நடத்தவில்லை. அவர்களின் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே யாகம் நடத்தப்பட்டது. இனியும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சத்தை  அதிமுக அரசு சரிசெய்யாவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்’ என்றார். 

  jayakumar

  முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்,  தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை எனவும் தண்ணீர் பற்றாக்குறைதான் நிலவுகிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.