தண்ணியடிச்சா ஊருக்கே கறி விருந்து… கலக்கும் ஆலமர பஞ்சாயத்து!

  0
  4
  கறி விருந்து

  ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்பதை எல்லாம் படித்துப் பார்த்தும் பலரும் இந்தியா முழுவதுமே குடி போதைக்கு அடிமையாகி வருகிறார்கள். இந்த பாழும் குடியை நிறுத்துவதற்கு `நாட்டாமை’ ஸ்டைலில் விநோதமான தீர்ப்பை வழங்கியிருக்கிறார் கிராமத்தில் ஆலமரத்துக்கு அடியில் உட்கார்ந்து பேசும் பெரியவர் ஒருவர். ‘நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு’ என்றெல்லாம் யாரும் அவரிடம் மல்லுக்கு நிற்காமல் ஒழுங்காக அந்த கிராமத்திற்கே ஆட்டுக்கறி விருந்து போட்டு வருகிறார்கள்.

  alcohol

  இன்றும் பாரம்பரியமான கிராமங்கள் இந்தியாவில் இருக்கத் தான் செய்கின்றன. அப்படியானதொரு அழகு சூழ் கிராமமாக இருக்கிறது குஜராத் மாநிலத்தில் காதிசிதாரா கிராமம். இந்த கிராமத்தில் இன்றும் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். 800 பேர் வரையில் வசித்து வரும் இந்த கிராமத்தில் பலரும் மது பழக்கத்துக்கு அடிமையானார்கள்.  போதை உச்சத்துக்கேறியதும், வார்த்தைகள் தடித்து வெளிப்பட்டு அடிக்கடி மோதல்களும், கொடூர கொலைகளுமாய் அமைதியான கிராமத்தில் அரங்கேறியது 
  கிராமத்தில் பலரும் நிம்மதியைத் தொலைத்த நிலையில், அந்த ஊர் நாட்டாமை விஷயத்தைக் கையிலெடுத்து தனது அதிரடி தீர்ப்பினால் இரண்டே வருஷத்தில் மொத்த கிராமத்தையும் குடி பழக்கத்தில் இருந்து திருத்தியிருக்கிறார். கிராமத்துக்கு வெளியே எப்படி வேண்டுமானாலும் இருந்துக் கொள்ளுங்கள். ஆனால் இந்த கிராமத்திற்குள் குடி போதையில் யார் வந்தாலும், அவங்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம். குடிச்சுட்டு தகராறு செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்.

  food

  கூடவே இந்த மொத்த கிராமத்துக்கும் திருவிழா கணக்கா அவங்களோட சொந்த செலவுல ஆட்டுக்கறி விருந்து வைக்க வேண்டும். இதுவே எனது சாசனம்’ என தீர்ப்பு சொல்லி கறாராக கடைப்பிடிக்கவும் வைத்திருக்கிறார். 800 பேருக்கு ஆட்டுக்கறி விருந்து வைக்கணும்னா ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். 
  முதல் வருஷம் 5 பேர் சிக்கி சின்னாபின்னமான நிலையில், அடுத்த வருஷம் ஒருத்தர் மட்டுமே சிக்கியிருக்கிறார். இப்போதெல்லாம் எங்க கிராமத்துல யாருமே குடிக்கிறதில்லை’ என்று உற்சாகமாக சொல்கிறார் கிராமவாசி ஒருவர்.