‘தங்கையை திருமணம் செய்து கொள்ள விரும்பிய கணவனின் ஆசையை நிறைவேற்றிய மனைவி’…வியக்க வைக்கும் சம்பவம்!

  0
  5
  சகோதரிகள்

  ரக்ஷனா மட்டுமல்லாது முதல் மனைவி வினிதாவுக்கும் மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டுள்ளார். 

  மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் நடந்த ஒரே திருமண விழாவில் உறவினர் பெண்கள் இருவரை மணமகன் மணம்  முடித்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

  மணமகனாக இருந்த திலீப்  கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பே வினிதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3  குழந்தைகள் உள்ளனர். திலீப் வினிதாவின்  தங்கை முறையான உறவினர் பெண்ணான ரக்ஷனாவை தற்போது  இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அப்போது மணமேடையில் ரக்ஷனா மட்டுமல்லாது முதல் மனைவி வினிதாவுக்கும் மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டுள்ளார். 

  ttn

  இதுகுறித்து கூறியுள்ள திலீப், நீண்ட காலமாக நான் ரக்ஷனாவை  விரும்பி வந்தேன்.  அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் எனது மனைவியிடம் கூறினேன்.  அவரும் விருப்பம் தெரிவித்தார்’ என்று கூறி அதிர்ச்சியைக் கிளப்புகிறார்.

  ttn

  திலீப்பின் முதல் மனைவி வினிதாவோ, எனக்கு உடல்நிலை சரியில்லை. எனது மூன்று குழந்தைகளைக்  கவனித்துக் கொள்ளவும் ஆள் இல்லை. அதனால் இந்த திருமணத்திற்குச் சம்மதம் சொன்னேன்’ என்றார்.