தங்கம் ரேஞ்சுக்கு உயரும் வெங்காயம் விலை: நடுத்தர மக்கள் கலக்கம்!

  0
  1
  ஓ.பி.எஸ்

  வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் அதன்விலை அதிகரித்துள்ளது.

  கனமழை காரணமாக வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால்  டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம்  80 ரூபாயாக உயர்ந்துள்ளது

  onion

  வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் அதன்விலை அதிகரித்துள்ளது. டெல்லியில் கிலோ வெங்காயம் 80  70 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதேபோல் சென்னையில் 60 முதல் 65 ரூபாய்  வரை வெங்காயம் வியாபாரிகள் விற்கின்றனர். முன்னதாக சென்னையில் கடந்த வாரம் இதே வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

  onion

  மக்களின் சிரமத்தைக் குறைக்கும் விதத்தில் மத்திய அரசு இருப்பு வைத்திருந்த 56 ஆயிரம் டன் வெங்காயத்தை சந்தையில் விநியோகம் செய்து வருகிறது. மேலும் வெளிநாடுகளிலிருந்தும்  வெங்காயத்தை இறக்குமதி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இருப்பினும் வெங்காயத்தின் இந்த விலை உயர்வு சாமானிய மக்கள் மத்தியில்  கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.