“தங்கமும் வேணாம் ,வெள்ளியும் வேணாம் ,வெங்காயம் மட்டும் போதும் “என்று onion ஐ  ஆட்டைய போடும் நபர் -இனி வெங்காயத்தையும் வங்கி லாக்கரில்தான் வைக்கணும் போல

  0
  10
   வெங்காயம்

  ஹைதராபாத்தில் ஒரு சி.சி.டி.வி கேமராவில்  ஒரு அடையாளம் தெரியாத நபர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, பின்னர் கடையில்  வைத்திருந்த பெட்டிகளை  திறந்து பின்னர் ஒரு கூடையிலிருந்து வெங்காயத்தை தனது பையில் போட்டுக்கொண்டு ஓடிய காட்சி பதிவாகியுள்ளது .

  onion

  கேமராவில் சிக்கிய இந்த செயலால்  சுமார் 15-20 கிலோ வெங்காயம் , ஒரு பெண் விற்பனையாளரின் கடையில்  இருந்து திருடப்பட்டதாக பொலிசார் சனிக்கிழமை தெரிவித்தனர். வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த சம்பவம் நடந்துள்ளது, மேலும் வெள்ளிக்கிழமை காலை தனது கடையில்  இருந்து வெங்காயத்தை காணவில்லை என்று பெண் கன்டுபிடித்தார் .

  இருப்பினும், அந்த பெண் எந்த புகாரும் பதிவு செய்யாததால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று சிக்கட்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் பி.சிவ சங்கர் ராவ் தெரிவித்தார்.

  ஹைதராபாத்தில் உள்ள சில்லறை சந்தையில் வெங்காயத்தின் விலை தரத்தைப் பொறுத்து ஒரு கிலோவுக்கு ரூ .40 முதல் 150 வரை உயர்ந்துள்ளது .