தங்கமான மனுசனாச்சே நம்ம முதலமைச்சர்!

  0
  1
  CM Palanisamy

  எடப்பாடியார் தனக்காக காவலர்கள் யாரும் வெயிலிலோ, மழையிலோ பாதுகாப்புப் பணியில் ஈடுபடவேண்டாம் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கின்றனர். அது உண்மையும்கூட. காரணம், வழக்கமாக முதல்வர் வருகைக்கு பல மணி நேரங்களுக்கு முன்பு கால்கடுக்க காத்திருக்கும் பெண் போலீசாரை இப்போதெல்லாம் அதிகம் காண முடிவதில்லை.

  சட்டசபையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை. தமிழக காவல்துறையினருக்கு இனிப்பான செய்திகள் வெளியாகும் நாள். ஆனால், மானிய கோரிக்கைக்கு முன்பாகவே சென்னையில் பணியில் இருக்கும் பெண் காவலர்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்லாமல் செய்திருக்கிறார் எடப்பாடியார். ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது, போயஸ் கார்டனில் இருந்து கோட்டை வரை காலையும் மாலையும் காவலர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பந்தோபஸ்து பணியில் ஈடுபட்டு இருப்பதை காணலாம்.

  Lady Police on duty

  எடப்பாடியார் தனக்காக காவலர்கள் யாரும் வெயிலிலோ, மழையிலோ பாதுகாப்புப் பணியில் ஈடுபடவேண்டாம் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கின்றனர். அது உண்மையும்கூட. காரணம், வழக்கமாக முதல்வர் வருகைக்கு பல மணி நேரங்களுக்கு முன்பு கால்கடுக்க காத்திருக்கும் பெண் போலீசாரை இப்போதெல்லாம் அதிகம் காண முடிவதில்லை. தேவையான அளவுக்கு மட்டும் குறைவான எண்ணிக்கையில் முதல்வரின் கான்வாய் பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். எடப்பாடியாருக்கு ஒரு ஜே போடுவோமா, வேண்டாம், நன்றி சொன்னால் போதும்.