ட்விட்டரில் ட்ரெண்டாகும் #வெற்றிமகன்கவின்! பிக்பாஸ் காதல் மன்னனுக்கு வந்த வாழ்வு

  0
  2
  Kavin

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் மன்னனாக வலம் வரும் கவினுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். 

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் மன்னனாக வலம் வரும் கவினுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். 

   பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலமான கவின் பங்கேற்றுள்ளார். 4 பேரை காதலித்து ப்ளே பாயாக பிக்பாஸ் வீட்டிற்குள் உலாவந்த கவினை கமல் கண்டித்தார். ஏற்கனவே வெளியில் ஒரு காதலியுடன் இருந்ததாகவும் தற்போது அவருடன் தொடர்பு இல்லாமல் இருப்பதாகவும் லாஸ்லியாவிடம் கூறி காதலை வளர்த்துவருகிறார். 

  Kavin

  இந்நிலையில் வெற்றி மகன் கவின் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் அவரது ஆதரவாளர்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பிரபல வைரல் ஜோதிடர் பாலாஜியின் வாக்குப்படி முகென் அல்லது கவின் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னராவர் என்ற செய்தி வெளியானதிலிருந்து கவின் இன்னும் கொஞ்சம் ட்ரெண்ட் ஆகிவிட்டார். 

  Kavin

  ஆனால்  கவினை ட்ரெண்ட்டாக்குவது, காசு கொடுத்து செட் செய்யப்பட்ட ஆட்கள்தான் என்றும் கூறப்படுகிறது. இந்த ஹேஷ்டேக்குக்கு எதிராகவும் பலர் ட்வீட் போட்டுவருகின்றனர். இந்த பொழப்புக்கு நாலு தெருவுல பிச்ச எடுக்கலாம் என்ற விமர்சன பதிவுகளையும் இந்த ஹேஷ்டேக்கில் காணமுடிகிறது. கவின் ஆர்மியினரால் உருவாக்கப்பட்ட இந்த ஹேஷ்டேக்கை பலரும் அவரை திட்டுவதற்காகவே பயன்படுத்தி வருகின்றனர்.