ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GoBackSonia… பழிக்கு பழி தீர்க்கும் தமிழக பாஜக!

  0
  1
  ganhi

  கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள வரும் சோனியாகாந்திக்கு எதிராக தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் #GoBackSonia என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

  சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள வரும் சோனியாகாந்திக்கு எதிராக தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் #GoBackSonia என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

  மறைந்த திமுக முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சிலையை திறந்து வைக்கிறார். அதன் பிறகு ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. அதில் கேரள முதல்வர் பினராயி  விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.விழாவில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தியும், காங் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் விமானம் மூலம் இன்று பிற்பகல் சென்னை வருகின்றனர்.

  trending

  இந்நிலையில், சோனியா காந்தியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் #GoBackSonia என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். முன்னதாக பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் தமிழகம் வந்தபோது, #GoBackModi, #GoBackAmitshah என்ற ஹேஷ்டேக்குகளை நெட்டிசன்கள் உலக அளவில் ட்ரெண்டாக்கினர். தற்போது அதற்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.