ட்ரம்ப் தலைக்கு விலை 21 கோடி..! இரான் சபாநாயகர் அறிவிப்பு..

  0
  7
  iranian-lawmaker

  அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவால் ட்ரோன் மூலம் கொள்ளப்பட்ட இரானிய ஜெனரல் சுலைமானியின் ஊர்காரர் அஹமது ஹம்சா.இவர் இரானில் உள்ள மத்திய கார்மான் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை சபாநாயகராக பணியாற்றி வருகிறார். நேற்று சட்டசபையில் உறுப்பினர்கள் இடையே மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் அஹமது ஹம்சா உரையாற்றினார். 

  iran attack

  அந்த உரையில் சுலைமானியின் சாதனைகளை,இரான் வளற்சிக்கு அவர் ஆற்றியுள்ள பங்கை புகழ்ந்து பேசினார். அதில் சுலைமானி உயிரோடு இருப்பதால் அமெரிக்கர்களுக்கு ஏற்படும் அபாயத்தை விட அவர் கொல்லப்பட்டதால் ஏற்படப்போகும் ஆபத்து அதிகம் என்றார். அதைத் 
  தொடர்ந்து சுலைமானியின் மரணத்திற்கு காரணமான அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பழிக்குப் பழியாகக் கொலை செய்யவேண்டும் என்றார்.அப்படி அமெரிக்க அதிபர் டிரம்பை யார் கொன்றாலும்,அவர்களுக்கு நாம் 3 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்குவோம் என்றார்.

  qassem

  தங்களது நாட்டின் ஜெனரல் ஒருவரை தந்திரமாக ஏமாற்றி இராக் தலைநகர் பாக்தாதிற்கு வரவழைத்து ட்ரோன் மூலம் அழித்த ட்ரம்ப்பை கொல்ல இரான் விரும்புவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால்,அவர் தலைக்கு இந்தியமதிப்பில் 21 கோடி ரூபாய் விதித்திருப்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆண்டுக்கு 147 லட்சம் கோடி ஜிடிபி கொண்ட நாட்டின் தலைவன் தலைக்கு இவ்வளவு சீப்பாகவா விலை வைப்பது?.