ட்ரம்புக்கு,மோடிக்கு முன்பே இந்தியாவில் பார்ட்னர்கள் உண்டு தெரியுமா?.

  0
  3
  trump tower

  இந்தியாவில் டெல்லியை அடுத்த குருகிராம்,மும்பை, பூனா,கல்கத்தா இங்கெல்லாம் ட்ரம்ப் டவர் என்கிற பெயரில்  ரியல் எஸ்டேட் கம்பெனிகள் பல ஆயிரம் கோடிகளை செலவிட்டு சொகுசு அப்பார்ட் மெண்ட்கள் வணிக வளாகங்கள் கட்ட களமிறங்கின.இந்த பார்ட்னர்களோடு ட்ரம்ப் கம்பெனி இணைந்து முதலீடு செய்திருக்கிறது என்று நினைத்து விடாதீர்கள்.

  டரம்ப் அமெரிக்காவுக்கு வெளியே அதிகம் முதலீடு செய்திருப்பது இந்தியாவில்தான்.இது பண முதலீடல்ல,குட்வில் முதலீடு.’ட்ரம்ப்’ என்கிற பெயரை முதலீடு செய்திருக்கிறார்கள்.2014-ல் மோடி பிரதமராவதற்கு முன்பே பலமுறை, ட்ரம்ப்பும் அவரது மகன் ஜூனியர் ட்ரம்பும் இந்தியா வந்திருக்கிறார்கள்.

  இந்தியாவில் டெல்லியை அடுத்த குருகிராம்,மும்பை, பூனா,கல்கத்தா இங்கெல்லாம் ட்ரம்ப் டவர் என்கிற பெயரில்  ரியல் எஸ்டேட் கம்பெனிகள் பல ஆயிரம் கோடிகளை செலவிட்டு சொகுசு அப்பார்ட் மெண்ட்கள் வணிக வளாகங்கள் கட்ட களமிறங்கின.இந்த பார்ட்னர்களோடு ட்ரம்ப் கம்பெனி இணைந்து முதலீடு செய்திருக்கிறது என்று நினைத்து விடாதீர்கள். டர்ம்ப் டவர் என்கிற ப்ராண்ட் பெயரை இந்த உள்ளூர் பார்ட்னர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.ஆனால் ட்ரம் கம்பெனிக்கு லாபத்தில் பங்கு தரவேண்டும்.

  trump-tower.1.jpg

  ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் நிற்கிறார் என்றதுமே வேக வேகமாக கட்டுமானங்களை அறிவித்தனர்.அந்தப் பார்ட்னர்களில் இருவர் இப்போது சிக்கலில் இருக்கிறார்கள்.ஒரு பார்டனர் நிறுவனம் கடும் நஷ்டத்தில் இருக்கிறது. மற்றொரு நிறுவணம் நிதி மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கிறது.
  பூனேவில் உள்ள கல்யாண் நகர் பகுதியில் ட்ரம்ப் டவர் என்கிற இரட்டை டவர்கள் கட்டி முடிக்கப்பட்டு 5 வருடம் ஆகிறது.மொத்தம் இரண்டு டவர்கள்.அடிமுதல் உச்சிவரை கருப்புக் கண்ணாடியால் பொதியப்பட்ட நவீனக் கட்டுமானம்.

  ஒவ்வொரு டவரும் 25 மாடிகள் கொண்டது.ஒரு ஃபுளோருக்கு ஒரு அப்பார்ட் மெண்ட்தான்.விலை 13 கோடி!.இதுவரை பாதிகூட விற்கவில்லை.
  அடுத்தது மும்பை, அங்கே ட்ரம்பின் பார்ட்னர் எம்3எம் என்கிற கம்பெனி. இவர்கள் அலுவலகத்தில் நடந்த சோதனையில் 7 கோடி டாலர் கணக்கில் வராத பணம் பிடிபட்டது.பின்னால் வரி கட்டிவிட்டார்கள்.இதோடு காட்டில் திருட்டுத்தனமாக மரம் வெட்டிய வழக்கிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

  trump-pune.jpg

  இதே மும்பையில் இன்னொரு ட்ரம்ப் டவர் புராஜெக்ட் இருக்கிறது. ஆளுங்கட்சி பின்புலம் உள்ள லோதா என்கிற கம்பெனி. இவர்கள் மீதும் வரி ஏய்ப்புச் செய்த குற்றச்சாட்டு இருக்கிறது. கொல்கொத்தா புராஜெக்ட் பார்ட்னர் ஆர்.டி.பி மீதும் கணக்கில் வராத பணம் வைத்திருந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. டெல்லி குருகிராமில் ஒரு ட்ரம்ப் டவர் வணிகவளாகம் கட்டப்போவதாக விளம்பரம் செய்தது ஐ.ஆர்.ஈ.ஓ என்கிற கம்பெனி.இன்னும் வேலை துவங்கவில்லை.காலி நிலத்தில் ஆடுகள் மேய்ந்துகொண்டு இருக்கின்றன.ஆனால் இந்தக் கம்பெனியில் முதலீடு செய்த இரண்டு முதலீட்டாளர்கள் தங்களிடம் 1.5 கோடி டாலர் மோசடி செய்து விட்டதாக கோர்ட்டுக்குப் போய் இருக்கிறார்கள். இதுதான் ட்ரம்ப் டவர்களின் தற்கால நிலவரம்.