“டேய் நீ ராணியை கட்டிக்கிறதைவிட கேணியில விழலாம் “-காதலியை பிடிக்காத தாய் -தலையணை அழுத்தி  கொன்ற மகன் ..

  0
  3
  representative image

  மகனின் காதலியை தாய்க்கு பிடிக்காததால், காதலர்கள் இருவரும் சேர்ந்து காதலனின் தாயை கொன்று நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் ஆக்ராவில் நடந்துள்ளது. ஆக்ராவில் சிவம்சர்மா  என்ற நபரும் ராணி என்ற பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இது சிவம் சர்மாவின் தாயார் லஷ்மிதேவிக்கு பிடிக்கவில்லை.

  மகனின் காதலியை தாய்க்கு பிடிக்காததால், காதலர்கள் இருவரும் சேர்ந்து காதலனின் தாயை கொன்று நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் ஆக்ராவில் நடந்துள்ளது. 
  ஆக்ராவில் சிவம்சர்மா  என்ற நபரும் ராணி என்ற பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இது சிவம் சர்மாவின் தாயார் லஷ்மிதேவிக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் சிவத்தின் அம்மா தேவிக்கு பிடிக்காததால் இருவரும் நகை பணத்துடன் வீட்டை விட்டு ஓட திட்டமிட்டனர்.
  இதனால் வெள்ளிக்கிழமை இரவு சிவம் தன் வீட்டிலிருந்த நகை பணத்துடன் காதலி ராணியோடு ஓட முயற்சிக்கும்போது அவரது தாயார் தேவி அதை தடுத்தார், இதனால் இருவரும் சேர்ந்து அவரது தாயாரை தலையணை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.
  இந்த சம்பவம் பற்றி போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் சிவம் மற்றும் அவரது காதலி ராணியை கைது செய்தனர், இருவர் மீதும் பிரிவு 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.