டெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த பும்ராஹ்!!

  0
  1
  meshamjpg

  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் பும்ராஹ்.

  வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி-20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் என மொத்தம் எட்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் டி-20 தொடரை இந்தியா 3-0 என்றும் ஒருநாள் தொடரை இந்தியா 2-0 என்றும் வென்றது. அதைத்தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் நடைபெற்று வருகிறது. 

  இதில் முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவா மாகாணத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. 

  இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பில் துணை கேப்டன் ரகானே 81 ரன்களும் ஆல் ரவுண்டர் ஜடேஜா 58 ரன்களும் எடுத்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா 297 ரன்கள் எடுத்தது.   

  இதனை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. இரண்டாம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்தது.

  இந்தியா தற்போது வரை 108 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் இன்னிங்சில் சேஸ் 48 ரன்களும், ஹெட்மாயர் 35 ரன்களும் எடுத்ததே அதிகபட்சமாக உள்ளது. 

  வேகப்பந்து வீச்சில் அசத்திய இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சமி, பும்ராஹ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

   

  முதல் இன்னிங்சில் டேரன் பிராவோ விக்கெட்டை வீழ்த்தியதன் டெஸ்ட் அரங்கில் தனது 50 ஆவது விக்கெட்டை பதிவு செய்தார் பும்ராஹ். 

  இதன் மூலம் மிகக்குறைந்த இன்னிங்சில் 50 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். இவருக்கு அடுத்த இடத்தில் முகமது சமி இருக்கிறார்.

  அதிவிரைவாக 50 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியல்:

  1. 21 இன்னிங்சில் – ஜஸ்பிரித் பும்ராஹ்

  2. 24 இன்னிங்சில் – முகமது சமி

  3. 27 இன்னிங்சில் – கபில் தேவ்/ ஸ்ரீசாந்த் / ராம்காந்த்