டெல்லி முதல்வராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு

    0
    2
    Arvind Kejriwal

    டெல்லி முதல்வராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்கிறார்.

    டெல்லி: டெல்லி முதல்வராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்கிறார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மதியம் 12.15 மணியளவில் டெல்லி முதல்வராக தொடர்ந்து 3-வது முறையாக பதவியேற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் அவருடைய இந்த பதவியேற்பு விழா நடைபெறுகிறது.  இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, டெல்லி பாரதிய ஜனதா எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.