டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள் தாமாக முன்வந்து மாவட்ட நிர்வாகத்தில் சரணடையவும் – தமிழக அரசு!

  0
  5
  கொரோனா வைரஸ்

  டெல்லியில் தனியார் அமைப்பு சார்பில் நடந்த மாநாட்டில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 981 நபர்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  டெல்லியில் தனியார் அமைப்பு சார்பில் நடந்த மாநாட்டில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 981 நபர்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 500 பேரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர், அரியலூர், திருச்சி, ஈரோடு, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில் நடந்த அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் தற்போது 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில் பங்கேற்ற இன்னும் பலரது விவரங்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதனால் இந்த எண்ணிக்கை இன்னும் உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

  Coronavirus

  இந்நிலையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி மாநாட்டிற்கு சென்ற சிலரை மாவட்ட நிர்வாகம் தொடர்பு கொண்டுள்ளது. பலரை மாவட்ட நிர்வாகத்தால் தொடர்பு கொள்ள இயலவில்லை. தொடர்புகொள்ள முடியாதவர்கள் தாமாகவே முன்வந்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்கிறோம். இவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால்  இவர்களது குடும்பங்களுக்கும், மற்றவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க இயலும். எனவே இவர்கள் பொறுப்புடன் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என கூறியுள்ளது.