டெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து! 35 பேர் பலி…..

  9
  தீயை அணைக்கும் பணியில் வீரர்

  தலைநகர் டெல்லியில் ராணி ஜான்சி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இன்று காலையில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தபட்சம் 35 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

  மத்திய டெல்லியில் ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டி பகுதியில் பிரபல நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. 6 மாடி கொண்ட இந்த தொழிற்சாலையில் நேற்று வேலையை முடித்து விட்டு தொழிலாளர்கள் அங்கு உறங்கி கொண்டு இருந்தனர். இன்று அதிகாலையில் யாரும் எதிர்பாராத சூழ்நிலையில் அந்த ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

  தீயணைப்பு வீரர்கள்

  அதிகாலை 5.22 மணி அளவில் தீயணைப்பு படையினருக்கு  தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 30 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 35 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

  தீயணைப்பு வீரர்கள்

  அதேசமயம் ஆலைகளுக்குள் சிக்கி தவித்த 22 பேரை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு ராம் மனோகர் லோகியா மற்றும் இந்து ராவ் மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.  தீ விபத்து குறித்து தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. காலை 5 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5.22 மணிக்கு எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக வந்து தீயணைக்கு பணியில் ஈடுபட்டோம். தீ விபத்து ஏற்பட்டபோது ஆலைக்குள் 50க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர் என தெரிவித்தார். போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் போக்குவரத்தை மாற்றி விட்டுள்ளனர்.