டெல்லி, சென்னையை தொடர்ந்து பாகிஸ்தானை மிரட்டும் காற்று மாசு ! 2 நாள் பள்ளி விடுமுறை !

  0
  3
  காற்று மாசு

  இந்தியாவில் டெல்லி மற்றும் சென்னை நகரங்களை மிரட்டி வந்த காற்று மாசு தற்போது பாகிஸ்தானையும் விட்டுவிடவில்லை. இதன் காரணமாக அங்கு 2 நாட்கள் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது. 

  இந்தியாவில் டெல்லி மற்றும் சென்னை நகரங்களை மிரட்டி வந்த காற்று மாசு தற்போது பாகிஸ்தானையும் விட்டுவிடவில்லை. இதன் காரணமாக அங்கு 2 நாட்கள் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது. 

  pakistan

  பாகிஸ்தானின் லாகூர் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் காற்றின்  மாசு அளவு ஆபத்தான அளவில் உள்ளது. இதனால் லாகூர், பைசலாபாத் மற்றும் குஜ்ரான் வாலா மாவட்டங்களின் எல்லைக்குட் பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்றும், நேற்றும் மூடப்பட்டது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீண்டும் திங்கட்கிழமை பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
  பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாக உலக காற்று தர குறியீட்டு அமைப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
  கடந்த வியாழனன்று லாகூரில் பெய்த மழை காரணமாக அங்கு மூடு பனி  உருவாகியது. இதனால் மக்கள் சுவாசிக்க முடியாமலும், வெளியில் செல்ல முடியாமலும் ஆபத்தாக மாறியது. இது பொது மக்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

  pakistan

  காற்றில் ஏற்பட்டுள்ள மாசை கட்டுப்படுத்தவும், மூடுபனி அளவு மேலும் உயர்ந்தால் செயற்கை மழையை கொண்டு வரவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
  இந்திய துணைக் கண்டத்தின் மாசுபட்ட முதல் 10 நகரங்களில் டெல்லி, லாகூர், கராச்சி, கொல்கத்தா, மும்பை மற்றும் காத்மாண்டு இடம் பெற்றுள்ளன.  காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஆனாலும் நாளுக்கு நாள் காற்றின் மாசு மிகவும் மோசமாகி வருகிறது. இது பெரும் கவலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் டில்லியில் நிலவும் காற்று மாசுபாட்டை சரி செய்ய காற்று சுத்திகரிப்பு கோபுரங்களை அமைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு, பல வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்து உள்ளது.