டெல்லி கலவரம் பற்றி கேட்டால், முந்தைய கலவரங்கள் பற்றி பேசிய அமித்ஷா! – எம்.பி-க்கள் அதிருப்தி

  0
  2
  Amit Shah

  டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடந்துவந்த நிலையில், ஆதரவாக போராட்டம் என்று பா.ஜ.க களத்தில் குதிக்கவே வன்முறை வெடித்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

  டெல்லியில் நடந்த கலவரங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதற்கு 1967ம் ஆண்டு முதல் நடந்த கலவரங்களை பட்டியலிட்டு நடவடிக்கை எடுப்போம் என்று அமித்ஷா பேசியது உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
  டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடந்துவந்த நிலையில், ஆதரவாக போராட்டம் என்று பா.ஜ.க களத்தில் குதிக்கவே வன்முறை வெடித்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், கலவரம் தொடங்கி 36 மணி நேரத்துக்குப் பிறகு எந்த வன்முறையும் நடக்கவில்லை என்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேசியிருந்தார் அமித்ஷா.

  delhi violence

  நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது: “கலவரத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 40க்கும் மேற்பட்ட படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் நரகத்தின் அடியில் மறைந்தாலும் அவர்களை பிடித்து வருவோம். வன்முறை ஏற்படுத்துவதற்காக மதத்தையும், கட்சியையும் தரக்குறைவாக பேசுவோருக்கு தண்டனை வாங்கித் தருவோம். அறிவியல்பூர்வமாக விசாரணை நடத்துவோம். டெல்லி கலவரத்துக்கு உள் நாட்டிலும், வெளிநாட்டிலிருந்தும் பண உதவி செய்யப்பட்டுள்ளது. அதை செய்த அமைப்பின் பெயரை நான் சொல்ல மாட்டேன். பிப்ரவரி 24ம் தேதி கலவரத்துக்கான பணம் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்டு டெல்லியில் விநியோகம் செய்யப்பட்டது.

  delhi violence

  என்னைப் பற்றியோ, என் கொள்கை பற்றியோ யாரும் குறை சொல்ல முடியாது. இந்தியாவில் 76 சதவிகித கலவரங்கள் காங்கிரஸ் ஆட்சியில்தான் நடந்துள்ளன. 1967, 1969, 1970, 1979, 1980, 1983, 1985 ஆகிய ஆண்டுகளில் கலவரம் நடந்தபோதெல்லாம் நாங்கள் ஆட்சியில் இல்லை. 1989-ல் டெல்லி, 1990-ல் ஐதராபாத், 1990-ல் அலிகர், 1992-ல் கான்பூர், 1992-ல் போபால், 1993-ல் மும்பை ஆகிய சம்பவங்கள் நடந்த நேரத்தில் நாங்கள் ஆட்சியில் இல்லை” என்றார்.