டெல்லி ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் வெளியானது! 8 பெண்களுக்கு வாய்ப்பு

  0
  5
  அரவிந்த் கெஜ்ரிவால்

  டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

  டெல்லி சட்டமன்ற தேர்தல் ஆம் ஆத்மி கட்சியின் பட்டியல் இன்று வெளியானது. மொத்தம் உள்ள 70 தொகுதிக்குமான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது எம்.எல்.ஏ-க்களாக உள்ள 46 பேருக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 15 எம்.எல்.ஏ-க்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட 9 இடங்களுக்கும் புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியிலும் துணை முதல்வர் மனிஷ் சோர்டியா பாட்பார்கஜ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தலில் 6 பெண்களுக்குப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த முறை 8 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.