டெல்லியில் 386 பேருக்கு கொரோனா… பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் – கெஜ்ரிவால் எச்சரிக்கை

  0
  1
  அரவிந்த் கெஜ்ரிவால்

  சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது.

  சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3000ஐ தாண்டியதையடுத்து பலி எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் மட்டும் சுமார் 386 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  coronavirus

  இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லி நிஜாமுதின் பகுதியின் மர்கஸ் கட்டடத்தில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்ட 2,300 பேரில் 500 பேர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; மேலும் 1,800 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைவரையும் பரிசோதித்து வருகிறோம், அடுத்த 2,3 தினங்களில் சோதனை முடிவுகள் வந்துவிடும், இதன் மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்” என தெரிவித்தார்.