டெல்லியில் பயங்கர தீ விபத்து…பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு!

  0
  4
  radha ravi

  சுமார் 30 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்த தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  டெல்லியில் ராணி ஜான்சி சாலையிலுள்ள ஆனஜ் மண்டி என்ற பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஒன்று நடந்துள்ளது.

  TTN

  இதனால் சுமார் 30 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்த தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  TTN

  இந்த விபத்தில்  இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 56 பேர் தீ விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர். 

  TTN

  தீ விபத்து நடந்த இடத்தில் பைகள், பாட்டீல்கள் மற்றும் சில பொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் 50 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்குத் தனது  டிவிட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.