டெல்லியில் டாக்டருக்கு கொரோனா… நோயாளிகளை தனிமைப்படுத்தும் அரசு!

  24
  REp. image

  டெல்லியில் கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடைய மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா பரவியுள்ளது உறுதியாகி உள்ளது. இதனால் மருத்துவ உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

  டெல்லியில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  டெல்லியில் கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடைய மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா பரவியுள்ளது உறுதியாகி உள்ளது. இதனால் மருத்துவ உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
  சில தினங்களுக்கு முன்பு டெல்லி மோஹல்லா மருத்துவமனையில் உள்ள மருத்துவரிடம் சிகிச்சைக்காக ஒருவர் வந்துள்ளார். அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இந்த நிலையில் டாக்டருக்கும் உடல்நலக் குறைவு ஏற்படவே, அவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா உறுதியானது. உடல்நிலை மேசாமடையவே ஐ.சி.யு வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  corona-isolation-ward

  இது குறித்து டெல்லி மருத்துவர்கள் சங்கத் தலைவரும் கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவருடன் பணியாற்றி வருபவருமான டாக்டர் ஹரிஷ் குப்தா கூறுகையில், “முதலில் கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு ஜி.டி.பி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மூச்சுத் திணறல் உள்ளதாக அவர் கூறவே, சஃப்தார்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஐ.சி.யு-வில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவரின் மனைவி, மகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் நிலை இயல்பாக உள்ளது” என்றார்.

  corona-virus-patients
  இந்த மருத்துவரிடம் சிகிச்சைக்கு வந்தவர்கள் பட்டியலை வைத்து அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் அரசு இறங்கியுள்ளது. டெல்லியில் மொத்தம் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதில் ஐந்து பேர் இந்த பெண்ணுடன் தொடர்பு உடையவர்கள் என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.